மயிலிட்டி மக்கள் போராட்டம்

Date:

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்று வெள்ளிக்கிழமை 12வது வாரமாகவும் அமைதி வழியில போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கு பலாலி மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை முன்னடுத்தனர்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை,...

யாழ்.பல்கலை பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கு – திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், ரிக் ரொக் மற்றும்...

நாட்டில் பிறப்பு விகிதம் குறைகிறது!

நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்