பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் 26 வயதான மாணவி நதுனி சஹஸ்ரீ கூரே என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்த இளம் பெண் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதோடு, அவர் இவ்வீட்டிலிருந்து தனது கல்வி நடவடிக்கைகளையும், மேலதிகமாக சட்டத்தரணி ஒருவரின் நீதிமன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வந்ததால், கதவு உடைக்கப்பட்டு, சடலமும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியும் அருகில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.




