ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

Date:

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) நிராகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டு கிருலப்பனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையிலும் இன நல்லிணக்கத்திற்கு பாதகமாகவும் கருத்து வெளியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், ஞானசார தேரரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 9 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தது.

அந்தத் தீர்ப்பை ரத்து செய்து தம்மை விடுவிக்குமாறு கோரி அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

ஆனால், அந்த மேல்முறையீட்டை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இன்று அந்த மனுவை நிராகரித்து, நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத கடூழிய சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...

68 வயது மாமியை வல்லுறவுக்குள்ளாக்கிய மருமகன்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது 68 வயதுடைய மாமியாரின் கழுத்தை நெரித்துக்...

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து வழுக்கி விழுந்த வெளிநாட்டு பெண் மரணம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்