26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
தொழில்நுட்பம்

மீடியா டெக் ஹீலியோ G35 SoC, 5000 mAh பேட்டரி உடன் ரியல்மீ C20A அறிமுகம்

ரியல்மீ நிறுவனம் தனது C-தொடரில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ C20A என்ற பெயரில் பங்களாதேஷில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரியல்மீ C20A ஒற்றை 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு BDT 8,990 (தோராயமாக ரூ.7,800) விலை நிர்ணயம் செய்துள்ளது. தொலைபேசி அயர்ன் கிரே மற்றும் லேக் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

ரியல்மீ C20A விவரக்குறிப்புகள்

ரியல்மீ C20A 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 20:9 திரை விகிதத்தக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G35 செயலி உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மைக்ரோ SD கார்டு வழியாக பிரத்யேக ஸ்லாட் உடன் மேலும் விரிவாக்கக்கூடியது.

கேமராவைப் பொறுத்தவரை, பின்புறத்தில் ஒரு f/2.0 லென்ஸ் மற்றும் LED ஃபிளாஷ் உடன் ஒற்றை 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. f/2.2 லென்ஸ் உடன் செல்பி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

ரியல்மீ C20A 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ரியல்மீ UI அடிப்படையில் ஆண்ட்ராய்டு 10 உடன் இயங்குகிறது.

இணைப்பு அம்சங்களில் இரட்டை சிம் ஆதரவு, 4ஜி VoLTE, வைஃபை 802.11 b/g/n/ac, புளூடூத் 5.0, GPS / A-GPS, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ USB போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 165.2×76.4×8.9 மிமீ அளவுகளையும் மற்றும் 190 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment