முன்னாள் பிரதேச செயலாளர் மொஹமட் ஹனீபா முகமது நியாஸ் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!

Date:

கொழும்பு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முன்னாள் பிரதேச செயலாளர் மொஹமட் ஹனீபா முகமது நியாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

அவர் குற்றவாளி எனக் கண்டறிந்து அவருக்கு ரூ .10,000 அபராதம் உட்பட ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

குவாரி பராமரிக்க அனுமதி வழங்குவதற்காக 2012 ஆம் ஆண்டில் ஒரு தொழிலதிபரிடமிருந்து ரூ .50,000 லஞ்சம் கோரியதாக நியாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த பின்னர், கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்காவால் 2018 ஜூன் 19 ஆம் திகதி சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க கோரி அவர் மேல்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...

பசில் ராஜபக்ஷவிற்கு பிடியாணை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்