பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை: நீதிமன்றத்தில் முண்டியத்த சட்டத்தரணிகள்!

Date:

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகர் சங்கீத்சன் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் மீதான வழக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லாமல் குற்றவியல் கோவையின் பிரிவொன்றின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்க சட்டமா அதிபர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் இன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை, சங்கீத்சனை பிணையில் விடுவிக்க கோரி இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் சுபாகர், அஞ்சனன் ஆகியோர் இநத மனுவை தாக்கல் செய்தனர். இதையறிந்த மற்றொரு தரப்பு சட்டத்தரணி தரப்பு ஏட்டிக்குப்போட்டியாக மனு தாக்கல் செய்த சுவாரஸ்யமும் நடந்தது. சங்கீத்சனின் குடும்பத்தினர் சார்பில் அரசியல் சார்பற்ற சட்டத்தரணிகள் மூலம் மனு தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் சட்டத்தரணிகளும் முண்டியடித்துக்கொண்டு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பேஸ்புக், இன்ஸ்டா, வட்ஸ்அப் செயலிழப்பு

ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பல தளங்கள் உலகளவில் செயலிழந்துள்ளதாகத்...

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 வருட சிறைத்தண்டனை

வட கொரியாவிற்குள் இராணுவ ட்ரோன்களை அனுப்பியதற்காக, தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி...

நீதிபதியை சாட்சியாக பெயரிட்டதை மீளப்பெறும் சட்டமா அதிபர் திணைக்களம்

அவிஸ்ஸாவெல்ல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனது அலுவல் பணிகளின் போது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்