சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Date:

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில் ஈடு​பட்​டனர்.

இந்​நிலை​யில், ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்​த​தாக டெல்லி போலீ​ஸார் சுகேஷ் மீது பதிவு செய்த வழக்கை அடிப்​படை​யாக வைத்து அமலாக்​கத் துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்​தது. மோசடி பணத்​தில் தனது காதலி​யும், பாலிவுட் நடிகை​யு​மான ஜாக்​குலின் பெர்​னான்​டஸுக்கு விலை உயர்ந்த பொருட்​களை சுகேஷ் சந்​திர சேகர் பரிசளித்​துள்​ளார். இதனால் இந்த வழக்​கில் மொத்​தம் 23 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் தான் அப்​ரூவர் ஆக விரும்​புவ​தாக நடிகை ஜாக்​குலின் டெல்லி நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​தார். இதற்கு அமலாக்​கத் துறை எதிர்ப்பு தெரி​வித்​தது. இந்​நிலை​யில், சுகேஷ் சந்​திர சேகர் நடிகை ஜாக்குலின் உட்பட 22 பேர் மீது மகா​ராஷ்டிர குற்​ற​வியல் சட்​டத்​தின் கீழ் குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்ய டெல்லி பட்​டி​யாலா சிறப்பு நீதி​மன்ற நீதிபதி பிர​சாந்த் சர்மா நேற்று உத்​தர​விட்​டார்.

இதையடுத்து அவர்​கள் மீது குற்​றச்​சாட்டு பதிவு செய்ய ஜுன் 3-ம் தேதி ஆஜராகும்​படி டெல்லி நீதி​மன்​றம் சம்​மன்​ அனுப்​பியுள்​ளது.

spot_imgspot_img

More like this
Related

CID ஒப்புதல்: சுரேஷ் சல்லேயின் உடைகளை அகற்றி தீவிர உடல் சோதனை; மனைவி தகவல் வெளியிட்டார்!

  மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்