வில்பத்து விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரிக்கும் வழக்கிலிருந்து நீதிபதி ஒருவர் விலகியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரடங்கிய நீதிபதிகள் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விசாணைகளிலிருந்து விலகுவதாக நேற்று (27) அறிவித்துள்ளார்.
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கருகில் காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்ததற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த முறையீட்டை விசாரணை செய்துவந்த நீதிபதிகளில் ஒருவரே விலகியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனுவை செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதியன்று மற்றொரு அமர்வின் முன், விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.



