பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டதன் படி, அணியின் தலைவராக குசல் ஜனத் பெரேராவும், உப தலைவராக குசல் மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழாமுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளார்.
இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி புறப்படவுள்ளது.
இலங்கை அணி விபரம்.-
குசல் ஜனித் பெரேரா (தலைவர்)
குசல் மெண்டிஸ் -(உபத் தலைவர்)
தனுஷ்க குணதிலக
தனஞ்சய டி சில்வா
பத்தும் நிஷங்க
தசுன் சானக
அசேன் பண்டார
வணிந்து ஹசரங்க
இசுறு உதான
அகில தனஞ்சய
நிரோஷன் டிக்வெல்ல
துஷ்மந்த சமீர
ரமேஷ் மெண்டிஸ்
ஹசித பெர்னாண்டோ
லக்ஷான் சந்தகன்
சமிக்க கருணாரத்ன
பினுர பெர்னாண்டோ
ஷிரான் பெர்னாண்டோ