கள்ளக்காதல் விவகாரத்தில் பறிபோன உயிர்

Date:

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.

நேற்று (17) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் வெலிஓயா, UDK பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெளிநாடு சென்றிருந்த இப்பெண், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே கண்டி, கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர், இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தையுடன் வெலிஓயா தோட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மனைவி நீண்ட நாட்களாகத் தனது வீட்டிற்குத் திரும்பாததால், அவரை மீண்டும் அழைத்துச் செல்வதற்காகக் கணவன் நேற்று முன்தினம் (16) மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போது, தனது மனைவி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கணவனிடம் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கண்டித்ததோடு இந்த உறவை நிறுத்துமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் முதல் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியுள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியைக் கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய கணவன் மற்றும் கள்ள உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஆகிய இருவரையும் வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்