பிள்ளையானின் ஆதரவாளர்கள் போராட்டம்

Date:

பிள்ளையான் வெலிசறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கட்சித் தொண்டார்கள் கறுப்புப் பட்டியால் வாயைக்கட்டி அமைதியான கவனயீர்பு போராட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டு காந்து பூங்காவில் ஒன்று திரண்டு வாயை மூடி கறுப்பு துணியால் கட்டி நிலத்தில் அமர்ந்தவாறு இலங்கை நீதிதுறையை மதிக்கின்றோம் உண்ணாவிரத போராட்டத்துக்கு தீர்வு கொடுங்கள், மக்கள் தலைவனுக்கு கடுமையான சிறைச்சாலையா? சிறைச்சாலையை மாற்றிக் கொடு,

ஜனநாயகத்தை நிலைநாட்டிய தலைவனுக்கு தடுப்பு காவல் சடங்களை பின்பற்றுவதில் என்ன, உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் சந்திரகாந்தனுக்கு தடுப்புகாவல் கைதிக்கு வசதிகளை வழங்கு, பிள்ளையானின் நிழல்படங்கள் ஏந்தியவாறு அமைதியாக போராட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஊடபங்களுக்கு கருத்து தெரிவித்துவிட்டு போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சதித்திட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்