செவ்வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!

Date:

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் 27வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக கேக் வெட்டி, சிறிய விருந்து ஏற்பாடு செய்த சம்பவம் தொடர்பாக, கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உடனடியாக பொலிஸ் களப்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் மூலம் விசாரணை நடத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக இஷாரா செவ்வந்தியின் சகோதரர் உட்பட 15 பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுத்கடை நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, கொலைக்குப் பிறகு நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். சந்தேக நபரான அவர், நேபாளத்தில் பெலியகொட குற்றப்பிரிவின் முன்னாள் பணியாளரான ரோகன் ஒலுகலவால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபர் குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரின் 27வது பிறந்தநாள் 29ஆம் திகதியன்று அனுசரிக்கப்பட்டது.

அதன்படி, அவரின் சகோதரர் அவரது பிறந்தநாளுக்காக கொழும்பு குற்றப்பிரிவுக்கு ஒரு பெரிய பிறந்தநாள் கேக்கைக் கொண்டு வந்திருந்தார்.

இஷாராவின் பிறந்தநாளுக்காக குற்றப்பிரிவில் கேக் வெட்டத் திட்டமிடப்பட்டிருப்பதாக கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவுக்கு தகவல் கிடைத்தது.

பின்னர், குற்றப்பிரிவுக்கு வந்த நிஷாந்த சொய்சா, பிறந்தநாள் விழாவைத் தடுத்து நிறுத்தி, இவ்விஷயம் குறித்து ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒரு அறிக்கையைத் தயாரித்து, இவ்விழாவில் குற்றம் சாட்டப்பட்ட குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

அதன்படி, விசாரணைகள் முடியும் வரை பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்