கிளிநொச்சி ஊடகவியலாளர் த.பரமசிவனுக்கு ( சிவா) கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவரே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட எவரது பெயர்களையும் குறிப்பிடாது முகநூலில் சட்டவிரோத செயற்பாடுகளை விமர்சித்து ஊடகவியலாளர் சிவா பதவிட்ட பதிவு ஒன்றின் பொருட்டு தொடர்பு கொண்ட குறித்த நபர் உனக்கு பிள்ளைகள் குடும்பம் உண்டு ஆனால் நான் எதனையும் பார்க்க மாட்டன் உன்னை கொல்லுவன், உனது மண்டையை பிளப்பன், இன்றைக்கு அல்து நாளைக்குள் உனக்கு அடிப்பன் மரியாதை போய்விடடால் ஒருவன் எதனையும் பார்க்கமாட்டான் என மிக கடுமையான உயிர் அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஊடகவியலாளரின் குடும்பம் மிகுந்த அச்சுடன் காணப்படுவதுடன் குறித்த ஊடகவியலாளர் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.




