யாழில் மீண்டும் படைத்தரப்புக்கு காணி சுவீகரிக்க முஸ்தீபு!

Date:

எதிர்வரும் 20/01/2026 அன்று காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவில் எழுவைதீவு J/39 கிராம அலுவலர் பிரிவில் காளவாடியடைப்பு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான 2 பரப்பு காணி சிறீலங்கா கடற்படையின் சுவீகரிப்படவுள்ளது .

அதேபோன்று 21.01.2026 அன்று காலை ஒன்பது மணிக்கு எழுவைதீவு
மூன்றாம் வட்டாரத்தில் பொதுமனுக்கு சொந்தமான 53 பேர்ச்சஸ் அளவுள்ள காணி சிறீலங்கா கடற்படையின் எலரா படையணி முகாம் அமைப்பதற்காக நில அளவைக் காரியாலயத்தினால் சுவீகரிப்படவுள்ளதாக தமிழ்த்தேசிய பேரவையின் சார்பிலான ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி உப செயலாளருமான நிரஞ்சினி ஜெலஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார் .

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இதே காணிகளை கடற்படையினருக்காக அபகரிக்க முயன்றபோது தீவுப் பகுதியை சேர்ந்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் எழுவைதீவு மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆகவே இந்த பலாத்கார நடவடிக்கையை தடுத்து நிறுத்துதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்