இனி யாழ் மாநகரசபை கூட்டங்களில் ஆணையாளர் பங்குபற்றார்!

Date:

எதிர்வரும் காலங்களில் யாழ் மாநகர சபை ஆணையாளர் மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்கமாட்டார் என மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மாநகர சபை ஆணையாளர் பங்கேற்கவில்லை. தான் பங்கேற்காதமை தொடர்பில் மாநகர சபை முதல்வருக்கு கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தில், மாநகர சபை ஆணையாளர் மாநகர சபை கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மாநகர சபை கட்டளைச் சட்டங்களிலோ மாநகர சபை நியம துணை விதிகளிலோ குறிப்பிடப்படாததால் எதிர்வரும் காலங்களில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

சபை அமர்வு குழு நிலை கூட்டங்களாக மாற்றப்படும் சந்தர்ப்பங்களில் மாநகர சபை ஆணையாளரின் ஆலோசனை தேவை என கருதும் பட்சத்தில் அழைக்கப்பட்டால் பங்கேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்