பழனிசாமிக்கு அஜித் படம் பரிசளிப்பு: அதிமுக பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

Date:

சோழிங்கநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் படம் பரிசளிக்கப்பட்ட நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் 6-வது கட்டப் பிரசாரத்தில் திருப்போரூர் தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, எம்ஜிஆர் பிரதான சாலை திறந்தவெளித் திடலில் பிரச்சாரம் செய்தார்.

இதில் தமிழ்நாடு மாநில பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பலரும் அவருக்கு மலர்க்கொத்துகளையும், பொன்னாடைகளையும் அன்பளிப்பாக வழங்கினர்.

அப்போது தொண்டர்கள் சிலர் நடிகர் அஜித் மற்றும் இபிஎஸ் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஃப்ரேம் செய்து அவருக்கு பரிசளித்தனர். அதனை இபிஎஸ் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டங்களில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் காணப்பட்டன. இதனையடுத்து விரைவில் அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறும் என்று பலரும் கூறிவந்தனர். அதன்பிறகு அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. அதிமுகவில் இருந்த செங்கோட்டையனும் தற்போது தவெகவில் இணைந்து விட்டார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தில் அவருக்கு அஜித் படம் பரிசாக வழங்கப்பட்ட நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்