காட்டுக்குள் கசிப்பு வடித்தவர் சிக்கினார்!

Date:

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்படுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடம் ஒன்று நேற்று(10) திங்கட்கிழமை மதியம் கண்டு பிடிக்கப்பட்டதோடு, சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பொது அமைப்புக்கள், கிரம அலுவலகர் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் மன்னார் மாவட்ட மது வரி நிலைய அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று திங்கட்கிழமை (10) மதியம் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது மடு பூசரி குளம் மற்றும் இரணை இலுப்பைக்குளம் கட்டுப்படுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்தில் சட்ட விரேதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடம் ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன் போது கசிப்பு வடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, கசிப்பு வடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மற்றும் 14 லீற்றச் கசிப்பு போன்றவற்றை மீட்டனர்.

மன்னார் மாவட்ட மது வரி நிலையத்தின் அத்தியட்சகர் எஸ்.செந்தூர் செல்வன், மன்னார் மாவட்ட மது வரி நிலையத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி எம்.என்.மடிக சேகர, மது வரி நிலைய பரிசோதகர் எம்.பாலதாஸ், மது வரி நிலைய சார்ஜன் என்.டி.எம்.டில்கான், மது வரி நிலைய உத்தியோகஸ்தர்களான எதிரி வீர,திஸாநாயக்க,ஏ.ஜே.பீரிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் மாவட்ட மது வரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரனைகளின் பின்னர் சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்