கொரோனா தொற்றிலிருந்த பாதுகாப்பாக இருக்க சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிற்கு அரசு அறிவுரைகளை வழங்கி வருகிறது. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை கடைப்பிடிப்பதில்லை.
இதனால், பொதுமக்களிற்கு உறைக்கும் படியாக ஒரு சம்பவத்தை செய்ய நினைத்த பொலிசார், முகக்கவசம் அணியாதவர்களை, அலேக்காக அள்ளிச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்தில் தொடங்கிய இந்த அள்ளிச் செல்லும் நடவடிக்கை கொழும்பு, பண்டாரவளை, மட்டக்களப்பு என பரவி வருகிறது.
இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, கூட்டமொன்றில், முகக்கவசம் அணியாது அமர்ந்திருக்கின்றார்.
இந்த கூட்டம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவரை இதுவரை பொலிசார் ஏன் தூக்கிச் செல்லவில்லை என்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.