பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Date:

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையிலான உணவு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார சேவை பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று (10) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து கைச்சாத்தானது.  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சார்பில் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன் அவர்களும், கல்முனை மாநகர சபை சார்பில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் அவர்களும் இதில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கல்முனை மாநகர எல்லை பிரதேசங்களிலுள்ள உணவகங்கள் மற்றும் ஏனைய உணவு சார் உற்பத்தி நிலையங்களிலும், பொதுமக்கள் உணவு பாதுகாப்பு விடயங்களிலும், இருசாராரரும் இணைந்து பணியாற்றுவது என்றும் திண்மக்கழிவகற்றல் போன்ற பொதுமக்கள் சுகாதார விடயங்களிலும் ஆளணி மற்றும் வளங்களை பரிமாறி கொள்வது என்றும் புரிந்துணர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலமாக நஞ்சற்ற உணவு, நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் திண்மக்கழிவுகளை முறையற்ற விதத்தில் வீசுதல் தொற்றுநோய் கட்டுப்பாடு, தொற்றா நோய் கட்டுப்பாடு, வியாபார நிலையங்களை கண்காணித்தல் போன்றவற்றை கல்முனை மாநகர சபை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுசுகாதார பரிசோதகர்கள் ஊடக சேவைகள் வழங்கப்படுமென இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன், கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், ஆகியோருடன் இணைந்து மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அர்சத் காரியப்பர், பிராந்திய தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் என். ரமேஷ், ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில்  சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்