ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய மனைவி

Date:

உடல்நலக் குறைவால் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் செப்டம்பர் 17 அன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகரும் எம்.பி-யுமான கமல்ஹாசன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் எனத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மாலையில், வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து அவரது உடல் இறுதி ஊர்வலம் கொண்டுசெல்லப்பட்டது.

அப்போது, ரோபோ சங்கரின் மனைவி தன் கணவரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடினார்.

பின்னர், வளசரவாக்கம் மின்மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்