பிணையில் வெளிவநடதார்- தேசபந்து தென்னகோன்

Date:

கடந்த மே 9, 2022 ம் ஆண்டு காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) தேசபந்து தென்னகோன் இன்று பிழணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவில் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளுடன் அவருக்கு பிணை வழங்கி பயணத் தடை விதித்தார்.

தும்பரா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னகோன் ஜூம் மென்பொருள் தொழில்நுட்ப தொடர்பாடல் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தென்னகோன் இந்த வழக்கில் 33வது சந்தேக நபர் அல்ல, 37வது சந்தேக நபர் என்றும், 33வது சந்தேக நபர் லியானாட் மெண்டிஸ் என்றும் நீதவான் மேலும் தெளிவுபடுத்தினார்.

2022ஆம் ஆண்டு அலரிமாளிகை காலி முகத்திடலில் முன்னைய அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை மையப்படுத்தி அப்போதைய அரசை பதவி நீக்க பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.

குறித்த போராட்டகாரர்கள் மீது பொலிஸ் தரப்பு சரமாரியான தாக்குதல்களை முன்னெடுத்ததோடு தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு துணை போன குற்றச்சாட்டடில் முன்னாள் துணை பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்