இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி ஆகியோரின் அம்மா மணிமேகலை கங்கை அமரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69. திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பாடகராக திரையுலகில் அறிமுகமான வெங்கட் பிரபு பிறகு நடிகரானார். நடிகரான வேகத்தில் சென்னை 28 படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அவரின் தம்பி பிரேம்ஜி அமரன் படங்களில் நடிப்பதுடன், இசையமைக்கவும் செய்கிறார்.
வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் அம்மா செல்லம். அவர்களின் அம்மா மணிமேகலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார்கள். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 69.
மணிமேகலையின் இறுதிச் சடங்கு இன்று நடக்கவிருக்கிறது. அவர் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் அவர்களின் தந்தை கங்கை அமரன் ஆகியோருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரேம்ஜி அமரனின் திருமணத்தை பார்க்காமலேயே போய்விட்டாரே. தாயில்லாமல் பிரேம்ஜி பாவம் என்ன செய்யப் போகிறாரோ என்கிறார்கள் ரசிகர்கள்.