யாழ் போதனாவில் வெளியிடத்தவர்களும் பெருமளவில் அழைக்கப்பட்டு சத்திரசிகிச்சை: கொரோனா பரிசோதனை இல்லையென குற்றச்சாட்டு!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை பிரிவில் இன்று முதல் பிரமாண்ட கண்புரை சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளது. இன்று முதல் நாளில் நூற்றுக்கணக்கானவர்களிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவனினால் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

வெளிமாவட்டங்களை சேர்ந்த பெருமளவான சிங்கள மக்கள் உள்ளிட்டவர்களிற்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்யில் சிகிச்சை இடம்பெறவுள்ளது.

தற்போதைய கொரோனா அச்சுறுத்தலான காலகட்டத்தில், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தும் நோயாளர்கள் கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுள்ள அநுராதபுரம், பொலன்னறுவை  உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் சத்திரசிகிச்சைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக சமூகஊடகங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கொரொனா தொற்று ஏற்பட்டு, சத்திர சிகிச்சைகள் பல ஒத்திவைக்கப்பட்டன. வைத்தியசாலை சேவைகளும் மட்டுப்படுத்தப்பட வேண்டியிருந்தது.

கடந்த சில வருடங்களாக, வெசாக் தினத்தை அண்மித்த காலப்பகுதியில் வருடாந்தம் வைத்தியர் மலரவனினால் பல பகுதிகளை சேர்ந்த மக்களை அழைத்து பெருமெடுப்பிலான கண்சத்திரசிகிச்சை இடம்பெற்று வருகிறது. வைத்தியர் மலரவனின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் வெசாக் தினத்தை அனுட்டித்த விவகாரமும் சில வருடங்களின் முன் சர்ச்சையானமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்