யாழில் வீட்டுவாசலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

Date:

இரவு நேரம் இசை நிகழ்ச்சிக்கு சென்று, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு திரும்பிய இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்த நிலையில் வீட்டு வாசலில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அருகில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்து விட்டு, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

புத்தூர் கிழக்கை சேர்ந்த செல்வச்சந்திரன் மிமோஜன் (வயது 27) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டு வாசலில் இளைஞன் வீழ்ந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்த பொழுதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான உடல் கூற்று பரிசோதனையில் அவர் பாம்பு தீண்டி உயிரிழந்தது தெரிய வந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்