செம்மணியில் குழந்தையை கட்டியணைத்தபடியிருந்த எலும்புக்கூடு மீட்பு!

Date:

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 25 ஆவது நாள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 102 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 115 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்