யாழ் மாநகர சபையின் கல்லூண்டாய் வெளியில் அமைந்துள்ள குப்பை மேடு தொடர்ச்சியாக எரியூட்டபடுவது தொடர்பில் வலிகாமம் மேற்கு பிரதேச மக்களின் சுகாதார சுற்றாடல் பாதிப்பிற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டி வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் யாழ் மாநகரசபையின் குறித்த செயற்பாட்டிற்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யாழ் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கூட்டம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது திண்மக்கழிவு விடயம் தொடர்பில் கலந்துரையாடபட்டது இதன் பொழுது கருத்து தெரிவித்த தவிசாளர் கல்லூண்டாய் வெளி குப்பை மேடு தொடர்ச்சியாக எரியூட்டபடுவதால் எமது பிரதேச மக்கள் குறித்த வீதியை யாழ்பாணத்திற்கு பிரதான வீதியாக பயன்படுத்துகின்றார்கள் அவர்கள் பலர் சுகாதார ரீதியாகவும் அராலி போன்ற பிரதேசங்கள் சுற்றாடல் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழலும் காணப்படுகின்றது.
ஆகவே மாநகர சபைக்கு எமது கண்டனங்களையும் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் காலங்களில் எமது பிரதேச மக்களின் நலனை கருத்தில் கொண்டு இதனை தடுத்து நிறுத்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுப்புமாறு சபையிடம் தீர்மானத்தை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்.




