24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இந்தியா

மே 17 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு; கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்- டெல்லி முதல்வர் அறிவிப்பு!

டெல்லியில் மே 17 வரை ஊரடங்கு இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்தார். மேலும், இந்த முறை ஊரடங்கு இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும், ஊரடங்கு காலத்தில் மெட்ரோ சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

மேலும் பேசிய முதலமைச்சர், “டெல்லியில் கொரோனா நேர்மறை விகிதம் ஏப்ரல் 26 அன்று 35 சதவீதத்திலிருந்து தற்போது 23 சதவீதமாக குறைந்துள்ளது. பாதிப்புகளும் குறைக்கத் தொடங்கியுள்ளன.” என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

முன்னதாக நேற்று, டெல்லியில் மேலும் 332 புதிய கொரோனா இறப்புகள் மற்றும் 17,364 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நேர்மறை விகிதம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 25 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கடந்த ஆறு நாட்களில் இது ஐந்தாவது முறையாகும். மேலும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 20,000’க்கும் குறைவாகவே உள்ளது.

டெல்லியில் வெள்ளிக்கிழமை 19,832, வியாழக்கிழமை 19,133, புதன்கிழமை 20,960, செவ்வாய்க்கிழமை 19,953, திங்கள் 18,043, ஞாயிற்றுக்கிழமை 20,394, சனிக்கிழமை 25,219, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 27,047, கடந்த வாரம் வியாழக்கிழமை 24,235 மற்றும் கடந்த வாரம் புதன்கிழமை 25,986 வழக்குகள் பதிவாகியுள்ளன.

வழக்கு நேர்மறை விகிதம் 23.34 சதவீதமாக இருந்தது. இது ஏப்ரல் 16 அன்று கடைசியாக 19.7 சதவீதமாக இருந்தது. அரசாங்க தரவுகளின்படி. இது ஏப்ரல் 17 அன்று 24.6 சதவீதமாக இருந்தது.

ஏப்ரல் 22 அன்று, நேர்மறை விகிதம் 36.2 சதவீதமாக உயர்ந்தது. இது தான் இதுவரையில் மிக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது நேர்மறை விகிதம் குறைந்து வரும் நிலையிலும், டெல்லியில் ஊரடங்கை முன்பை விட கடுமையாக கடைபிடிக்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

Pagetamil

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

Pagetamil

‘சார்’ சர்ச்சை: அண்ணா பல்கலை. விசாரணை குறித்து ஆதாரமற்ற தகவல் – காவல் துறை விளக்கம்

Pagetamil

விண்வெளியில் வேளாண்மை செய்யும் ஆய்வில் வெற்றி!

east tamil

Leave a Comment