கெஹெலிய, மகனுக்கு பிணை

Date:

கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடக, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், பதினைந்து பேரை பெயரளவில் தனது ஊழியர்களாக சேர்த்து, அவர்களுக்கு சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேர ஊதியத்தை வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் மூன்றிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மகன் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சரின் முன்னாள் ஒருக்கிணைப்பு அதிகாரியான நிஷாந்த பண்டார ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபர்கள் மூவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபர்களும் தலா 50,000 ரூபா ரொக்க பிணையிலும் மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், சந்தேக நபர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பிணையாளர்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையில், ரமித் ரம்புக்வெல்லவின் மாதிரி கையொப்பங்களை விசாரணைக்காக பெற வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதற்காக அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜராகி கையொப்பங்களை வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஆராய்ந்த நீதவான், ரமித் ரம்புக்வெல்ல நாளை (ஜூன் 04) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜராகி மாதிரி கையொப்பங்களை வழங்க உத்தரவிட்டார்.

இந்த முறைப்பாடுகள் மீண்டும் 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்