தமிழ் தேசிய பேரவைக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான கொள்கைரீதியிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இன்று (2) யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ விடுதியில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கமும், தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பமும் கையெழுத்திட்டனர்.
தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைத்து செயற்படுவது புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரதான உள்ளக்கமாகும்.





