தமிழ் தேசிய பேரவைக்கும்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (2) யாழ்ப்பாணத்தில் கையெழுத்தாகவுள்ளது.
உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து இரு தரப்பினரும் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, உடன்பாடு எட்டப்பட்டு, இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.
மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ரில்கோ விடுதியில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகும்.



