வடமாகாணத்தில் இன்று 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று (8) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 460 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில் யாழ் மாவட்டத்தில் 14 பேர், வவுனியா மாவட்டத்தில் 7 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேர், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 2 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலை 5 பேர், தெல்லிப்பளை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியிலிருந்த ஒருவர், ஊர்காவற்துறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில், கிளி பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் 2 பேர், பளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில், குருக்கள்குளம் பகுதியில் தொற்றாளருடன் நேரடி தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 பேர், வவுனியா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.