அம்பாறை ஓஐசியை மோதியவர் கைது!

Date:

கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸார் மீது வேகமாக வந்த கப் வாகனம் மோதியதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கப் வாகன சாரதி கைதாகியுள்ளார்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(7) மாலை அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டல மகா விஹாரைக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன் கப் வாகனம் மோதியதில் பொலிஸாரின் 600 சிசி மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதன் போது குறித்த விபத்தில் அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காயமடைந்துள்ளதுடன் இவ்விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் காயமடைந்த போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்