யாழ், முல்லையில் மின்னல் தாக்கிய 2 விவசாயிகள் உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் மின்னல் தாக்குதலினால் இருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (7) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல் வெளிபகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.

8ஆம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 43 வயதுடைய அருமைநாயகம் யசோதரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று இன்று (8) சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்துள்ளார். இதன்போது ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த குணரட்னம் குமரன் (39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்துகொண்டிருந்தார். இதன்போது மின்னல் அவர் மீது தாக்கியது. இந்நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்