மாணவர்களை விட மாணவிகளே பல்கலைக்கு அதிகமாக தெரிவு!

Date:

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளிலும் 64.73% பேர் பல்கலைக்கழக நுழைவுத் தகுதிகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெண் பரீட்சார்த்திகளில், 71.93% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேர் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றுள்ளனர்.

மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற போக்கு காணப்படுவதாகவும், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87% பேரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6% பேரும் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

இதேவேளை, இம்முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் குறித்த எண்ணிக்கை 64.73% ஆக பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த பரீட்சையில் மொத்தமாக 274,361 பரீட்சாத்திகள் தோற்றியதுடன், அதில் 222,774 பேர் பாடசாலை பரீட்சாத்திகளாவர். அதன்படி, 177,588 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக 2021ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றியவர்களில் 62.89% வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கையானது 2022ஆம் ஆண்டில் 63.25%ஆகவும், 2023இல் 64.33%ஆக அதிகரித்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 64.73%ஆக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இங்கே அவதானிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால், மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரே அளவில் இருப்பது அவதானிக்கப்படுகிறது, 3.45% சதவீதத்தைக் காட்டும் இதன் எண்ணிக்கையானது 9,457ஆக காணப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள்...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காரைதீவில் கதிரவன் கலைக்கழகத்தின் 196 ஆவது பட்டிமன்றம்!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, காரைதீவு பிரதேச சபை பொது நூலகத்தின்...

வெவ்வேறு காலகட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்… மயானத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்: செம்மணி புதைகுழி அறிக்கையின் முழுமையான தொகுப்பு!

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த முதல் நிபுணர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்