வவுணதீவு கொலை சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வு சேவை பொலிஸ்காரர் கைது!

Date:

தேசிய புலனாய்வு சேவை பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், தேசிய புலனாய்வு சேவை பிரிவுடன் இணைக்கப்பட்ட கரடியனாறு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கான்ஸ்டபிள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2018 ஆம் ஆண்டு வவுணதீவு காவல் நிலையத்தில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபரான இந்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த கொலைகள் தொடர்பில் பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட இந்த கொலைகள், தாக்குதல் சூத்திரதாரிகளின் பின்னணியில் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலைகளை விடுதலைப் புலிகளின முன்னாள் உறுப்பினர்கள் மேற்கொண்டதாக இராணுவப் புலனாய்வுத்துறை விசாரணைணை திசை திருப்ப முயன்றதாக சிஐடியின் முன்னாள் அதிகாரிகள் சிலர் பகிரங்கப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்