டொமினிகன் குடியரசு இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை 79 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் தேடுதல் நடத்தி காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று வருவதாகவும் தெரிவித்தனர்.
இரவு விடுதியின் மேற்பகுதி இடிந்து விழுந்து கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஆன பிறகும் மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்டு வருகின்றனர். ங்கப்படுகிறது
“அவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம், அதனால்தான் அந்த இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் கூட எஞ்சியிருக்காத வரை இங்குள்ள அதிகாரிகள் கைவிட மாட்டார்கள்” என்று மீட்பு பணியாளர்கள் கூறினர்.
தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியில் ஒரு பரபரப்பான இசை நிகழ்ச்சியின் போது குறைந்தது 300 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை குறைந்தது 155 பேர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில உள்ளூர் அறிக்கைகள் கிளப்பில் 500 முதல் 1,000 பேர் வரை இருந்ததாகக் குறிப்பிட்டன.
மான்டெஸ்கிரிஸ்டியின் வடமேற்கு மாகாணத்தின் ஆளுநரான நெல்சி குரூஸ், ஏழு முறை மேஜர் லீக் பேஸ்பால் ஆல்-ஸ்டார் நெல்சன் குரூஸின் சகோதரியும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். முன்னதாக, அவர் அதிகாலை 12.49 மணிக்கு ஜனாதிபதி லூயிஸ் அபினாடரை அழைத்து, தான் சிக்கிக்கொண்டதாகவும், கூரை இடிந்து விழுந்ததாகவும் கூறினார். அதிகாரிகள் தெரிவித்தபடி, குரூஸ் பின்னர் மருத்துவமனையில் இறந்தார். “இது மிகப் பெரிய சோகம்” என்று முதல் பெண்மணி ராகுல் அர்பாஜே செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு மேஜர் லீக் பேஸ்பால் நட்சத்திரமும் தனது உயிரை இழந்தார். 2011 ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸ் கார்டினல்ஸுடன் உலகத் தொடரை வென்ற 51 வயதான ஓய்வுபெற்ற MLB பிட்சர் ஆக்டேவியோ டோட்டல் இறந்தார். உள்ளூர் ஊடகங்களின்படி, அவர் உயிருடன் மீட்கப்பட்டார், ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது காயங்களால் இறந்தார்.
நள்ளிரவுக்குப் பிறகு கூரை இடிந்து விழுந்தபோது பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியில் மேடையில் இருந்த பிரபல டொமினிகன் மெரெங்கு பாடகர் ரூபி பெரெஸ், இறந்தவர்களில் ஒருவர்.




