பிணை இல்லை: தென்னக்கோனுக்கு ஏப்ரல் 3 வரை விளக்கமறியல்!

Date:

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா தேசபந்து தென்னகோன், நேற்று காலை தனது சட்டத்தரணிகளுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (19) சரணடைந்திருந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

குறித்த உத்தரவுக்கு அமைவாக தேசபந்து தென்னகோன் நேற்று மதியம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

அதற்கமைய, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (20) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்