யாழ்ப்பாண நகர பகுதியில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுவந்த குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பிடியாணை உள்ள நிலையில் அவர் தொடர்பில் யாழ்ப்பாண போலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவரது வீட்டிலிருந்து 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1