கம்பஹா மாவட்டத்தின் மஹேன பகுதியில் உள்ள பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, T56 துப்பாக்கி ஒன்றும் அதற்கு உரிய மெகசின் ஒன்றும், இயங்கக்கூடிய 23 இரவைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இன்று (26) காலை மினுவங்கொடை, பத்தடுவன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த ஆயுதங்கள் எந்தக் குழுவுக்குச் சொந்தமானது? என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது? போன்ற விடயங்களை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




