Pagetamil
இலங்கை

கொழும்பைச் சேர்ந்த நபர் கம்பஹாவில் சடலமாக மீட்பு

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெத்தேகம பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றின் அறையிலிருந்து 54 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்தவராக இனங்காணப்பட்டுள்ளார். அவர் குறித்த விற்பனை நிலையத்தில் தனியாக வசித்து வந்துள்ளதுடன், நேற்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் பூகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

சொந்த வீட்டுக்காக ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க நடக்கும் குடும்பம்!

Pagetamil

ட்ரம்ப் விதித்த அதிக வரி: ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அறிவிப்பு!

Pagetamil

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்தில் 4 பேர் பலி

Pagetamil

சிஐடியில் மைத்திரி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!