சொந்த வீட்டுக்காக ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க நடக்கும் குடும்பம்!

Date:

குடியிருக்க வீடு காணி இல்லை, பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்.

நேற்று முன்தினம் (06) மாலை அச்செழு, அச்சுவேலியில் இருந்து நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். ஏழ வயதான ஆண் பிள்ளை மற்றும் ஆறு வயதுடைய பெண் பிள்ளையுடன் கணவன், மனைவி என நால்வராக குறித்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இந் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவின் கவனத்திற்கு சென்றடையும் வரை நடை பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இ.கலீபன் நடைபயணி தெரிவித்தார்.

ஆனாலும் இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளனர். இதன் போது ஆளுநர் நா. வேதநாயகன் இவர்களுக்கான காணியை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு மருதங்கேண பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டு ஆவண செய்யுமாறு கோரியுள்ளார்.

ஆளுநரின் கோரிக்காக்கு அமைய மருதங்கேணி பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்...

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்