நாட்டில் நிலவும் கடும் வறட்சி நீடித்தால், மின்சாரக் கட்டணங்களை மீண்டும் உயர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்திருந்தோம். இருப்பினும், நாட்டில் தொடரும் வறட்சி காரணமாக மின்சார உற்பத்தியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வரவிருக்கும் மாதங்களில் மின்சாரக் கட்டணங்களில் மீண்டும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அத்துடன், கடந்த 6 மாதங்களில் மட்டும் மின்சாரத் துறைக்கு 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், வறட்சி மேலும் நீடித்தால் இந்த நட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய தேவையான நீர் மட்டம் தொடர்ந்தும் குறையுமாயின், மின்சாரத் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம். எனவே, மக்களும், நிறுவனங்களும் மின்சாரத்தை வீணாக்காத வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.



