மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் (27) சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்க கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அமைச்சு முடிவு செய்துள்ளது.
நாளை (26) வரும் மகாசிவராத்திரியை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர்கள் தெரிவித்தனர்.
விடுமுறையை உள்ளடக்கும் வகையில், மார்ச் 1 ஆம் திகதி சனிக்கிழமை சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு கூடுதல் பாடசாலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு 27 ஆம் திகதி விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.




