தையிட்டியில் போராடியவர்கள் பலாலி பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டனர்

Date:

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது.

இதற்காக அழைக்கப்பட்ட மூவரையும் இன்று 12 மணிக்கு சமூகம் அளிக்குமாறு தெரிவித்த பொலிசார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் அவர்களை காத்திருக்கச் செய்து அதன் பின்னர் நீண்ட மணி நேரம் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றதாக தெரிவித்தனர்.

குறித்த சட்டவிரோத தொடர்பாக பிரதேசசெயலகம் மற்றும் அரச திணைக் கழகங்களிடம் தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டது என்பது தொடர்பிலும் பொலிசார் பல கோணங்களில் கேள்விகளை எழுப்பியதாக விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் குறித்த விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களின் உறுதியுள்ள காணிகள் என்பதை அரச திணைக்களங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

என்ற விடயத்தை பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் தாம் குறித்த விகாரை அகற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...

நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார...

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்