ரயிலில் மோதி ஒருவர் பலி

Date:

பதுளை – எல்ல நானு ஓயா ஒடிசி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கி வந்த ஒடிசி ரயில், ஹாலி எலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, குறித்த நபர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவவத்தை தொடர்ந்து, உயிரிழந்த நபரின் சடலம் பதுளை ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் இதுவரை யார் என அடையாளம் காணப்படவில்லை எனவும், அவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துக்கான காரணங்களை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்திற்கான உண்மைக் காரணம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்