ஆரோக்கியமற்ற காற்று – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Date:

காற்றின் மாசுபாடு அதிகரிப்பு காரணமாக முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மைய நாட்களாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படுகின்ற நிலையில், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சிறிதளவு ஆரோக்கியமற்றதாக பதிவாகியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 68 முதல் 114 வரை பதிவாகியுள்ளதுடன், எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று காரணமாக, எதிர்வரும் நாட்களில் காற்றின் தரம் மேலும் பாதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், சுவாசக் கோளாறு மற்றும் அஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் எனவும், வெளியில் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும், உடல்நிலை பாதிக்கப்படுமானால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் அதிகாரிகளால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

spot_imgspot_img

More like this
Related

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...

நவம்பர் 09 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்-

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கமானது (EPDOTU), ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...

காட்டு யானை தாக்கியதில் இராணுவ சார்ஜென்ட் உயிரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்