விடுமுறை வழங்க மறுத்ததால் அலுவலகத்தில் கத்திக்குத்து!

Date:

மேற்கு வங்க மாநிலத்தில் விடுமுறை வழங்க மறுத்ததற்கு ஆத்திரமடைந்த அரசு ஊழியர் ஒருவர், தனது அலுவலகத்தில் சக ஊழியர்கள் நால்வரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் தொழில்நுட்பக் கல்வித்துறையில் பணியாற்றி வந்த அமித் குமார் என்பவர், இன்று காலை விடுமுறை கோரியபோது, அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. விவாதம் தீவிரமடைந்த நிலையில், அவரது கோரிக்கையை நிராகரித்த சக ஊழியர்கள் மீது கத்தியை பிரயோகித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த நால்வரும் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்திற்குப் பின்னர் தப்பியோட முயன்ற அமித் குமாரை, பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அலுவலக வளாகங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்