ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்ட பரிதாபம்; தாய் தடுத்தும் தண்ணீர் கொடுத்தார் மகள்.. கண்கள் குளமாகி அடங்கியது தந்தையின் மூச்சு: கொரோனாவின் கோர தாண்டவத்தில் புதையும் மனிதம் (VIDEO)

Date:

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்த ஒருவர், விஜயவாடாவில் பணியாற்றினார். சில நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனதுசொந்த கிராமத்துக்கு சென்றார். ஆனால், ஊராரும் உறவினர்களும் அவரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

இதனால் ஊருக்கு வெளியே உள்ளஒரு குடிசையில் அவர் தங்க வைக்கப்பட்டார். இவரது மனைவி, மகள் மற்றும் மகனும் அங்கேயே தனியாக ஒரு குடிசை அமைத்து தங்கி அவரை பார்த்துக் கொண்டனர். ஆனால், நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமானது. மூச்சு விட சிரமப்பட்டார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவரின் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. என்ன செய்வது என தெரியாமல் மனைவி, மகள், மகன் ஆகியோர் கதறி அழுதனர்.

இந்த சமயத்தில் குடிக்க தண்ணீர் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டே குடிசையில் இருந்து வெளியே வந்து கீழே விழுந்து விட்டார். இதையடுத்து, தந்தைக்கு தண்ணீர் கொடுக்க முயன்றார் அவரது மகள். ஆனால், மகளுக்கு கொரோனா தொற்று வந்துவிடுமோ எனும் அச்சத்தால், மகளை தடுத்தார் தாய். ஆயினும், தந்தை மீது இருந்த பாசத்தால், தாயின் பேச்சை கேளாமல் தனது தந்தைக்கு தண்ணீர் கொண்டுபோய் கொடுத்தார். அதை வாங்கிகுடித்தார் தந்தை. அந்தக் கணமே அவரது கண்கள் குளமாகி மூச்சு நின்று போனது. தந்தையின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் அந்த மகளும், மகனும் கதறி அழுதனர்.

பின்னர் ஊருக்கு வெளியே அவரது சடலம் தகனம் செய்யப்பட்டது. அதன் பின்னர இவர்கள் மூவருக்கும் கரோனா தொற்று பரவியது தெரியவந்தது.

தந்தைக்கு தண்ணீர் கொண்டு செல்லும்போது, மகளை தாய் தடுத்ததை அந்த கிராமத்தை சேர்ந்தஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரைல் ஆகி வருகிறது.

தாகத்தில் தவித்த தந்தைக்கு ஓடிச் சென்று தண்ணீர் கொடுத்த மகளின் கண்முன்னே, கண்களில் நீர் வழிய தந்தையின் உயிர் பிரிந்த சம்பவம் மனதை உலுக்கி விட்டது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்