சட்டவிரோதமான மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவவில் மாணிக்கக்கல் அகழ்வில் சட்டவிரோதமாக ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கர் கசோல் மேல் பிரிவு பகுதியில், சட்டத்திற்குப் புறம்பாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த குறித்த நபர், நேற்றைய தினம் (6) அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




