26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
மலையகம்

கண்டி-மஹியங்கனை வீதி: போக்குவரத்து தடை

கண்டி – மஹியங்கனை வீதி இன்று (21) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கண்டி – மஹியங்கனை வீதி மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் மாலை 6.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் கஹடகொல்லவுக்க அருகிலுள்ள 18 வளைவுப் பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களை தவிர்க்கும் முகமாக இவ் அறிவித்தல் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

east tamil

மகிழுந்து-பேருந்து விபத்து

east tamil

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Pagetamil

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

east tamil

விபத்தில் இரு மாணவர்கள் பலி

east tamil

Leave a Comment